Sachin's Emotional Speech on His 200th Test Cricket

By at12:44 AM -- 0 COMMENTS
Final words from the little
master!!!!!!


தனது 24 ஆண்டுகால கிரிக்கெட்
வாழ்க்கையை முடித்த சச்சின்,
வான்கடே மைதானத்தில்
கடைசி முறை பேசியது அனைவரின்
கண்களையும் குளம் ஆக்கியது.
இதுவரை எந்த வீரரும்
இப்படி பேச்சை பேசியதில்லை.
அவருடைய இன்றைய பேச்சு, அவர்
மீண்டும் அணியில் விளையாட
மாட்டார் என ஏங்க
வைத்துள்ளது என்று தான் சொல்ல
வேண்டும். சச்சின்
பேசியது பின்வருமாறு: ' இந்த
தருணத்தில் என்
அப்பா இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.
அவருக்கு தான் என் முதல் நன்றி,
1999ஆம் ஆண்டு உலககோப்பையின்
அவரது மறைவு செய்தி என்னை அதிர
வைத்தது. அவர் எப்போதும்
என்னை விட்டு கொடுக்க மாட்டார்.
எதற்கும் உன்
லட்சியத்தை விட்டு கொடுக்காதே என்று என்னிடம்
கூறுவார். அவரை இன்று ரொம் மிஸ்
பண்ணுறேன். என் அம்மாவின்
பொறுமைக்கு நான் அடிமை,
என்னை இன்று வரை ஒரு குழந்தை போல
தான் அவர் நினைத்து வருகிறார்.
எப்போது நான் ஆரோக்கியமாக இருக்க
வேண்டும் என்று தான் அவர்
நினைப்பார். என் அம்மாவின்
பிரார்த்தனை தான் என்னை இந்த
அளவிற்கு கொண்டு வந்துள்ளது.
என்னுடைய அங்கிள், ஆண்டிக்கும்
இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன். அவர்கள் ஊட்டிய
உணவு தான் எனக்கு கிரிக்கெட்
விளையாட தேவையான
பலத்தை கொடுத்தது. என்னுடைய
சகோதரர்களுக்கும் நன்றி, அவர்கள்
கொடுத்த ஊக்கம் தான்
எனக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.
என்னுடைய
சகோதரி சவீதாவை என்னால் மறக்க
முடியாது, நான் முதன் முதலாக
விளையாடிய கிரிக்கெட் பேட் அவர்
கொடுத்த பரிசு தான். என்னுடைய
கோச் சேகர் சாரை சந்தித்தது தான் என்
வாழ்க்கையின் திருப்புமுனை,
இதுவரை ஒரு தடவை கூட நீ
சிறப்பாக விளையாடினாய் என்று அவர்
என்னிடம் கூறியதில்லை. அதுதான்
மேலும் நான் சிறப்பாக விளையாட
ஊக்கம் தந்தது. என் வாழ்க்கையின் மிக
அழகான தருணம் என்றால் அது, நான்
அஞ்சலி திருமணம் செய்தது தான்.
அவருடைய ஆதரவு இல்லாமல் நான்
எந்த ஒரு இமாலய இலக்கையும் எட்ட
முடியாது.' என்று கூறினார். :-(

Share to:

No comments:

Post a Comment